உள்ளம் தொடர்பான செயல்களையும் நிகழ்வுகளையும் எடுத்துரைப்பதாக உளவியல் அமைந்துள்ளது. மனம், அகம், ஆன்மா ஆகிய சொற்கள் உள்ளம் என்ற பொருளை குறிப்பிடுகின்றன. மனிதன் தன் இயல்பூக்கங்களை கட்டவிழ்த்து வெளிப்படுத்துவதே விளையாட்டாக பரிணமிக்கின்றது. விளையாட்டு உந்துதலுக்கு உளவியல் கூறாகிய இயல்பூக்கம் காரணமாகிறது. விளையாட்டினை விரும்பியாடும் ஆட்டம் எனவும், மகிழ்ச்சித் தரக்கூடிய ஒரு செயலை விளையாட்டு எனவும் கூறுகின்றனர். உடல் உறுப்புகளின் செயல்பாட்டினாலேயே விளையாட்டுகள் நடைபெறுகின்றன. விளையாட்டினைத் தொடங்குவதற்கு முன்பிலிருந்து விளையாடி முடிப்பது வரை சில நெறிமுறைகளை பின்பற்றுகின்றனர். ஐம்பூதங்களான ஆகாயம், காற்று, நீர், நிலம், நெருப்பு இடம்பெற்றுள்ளன. விளையாட்டில் அறிவியல் ஆற்றலும் அமைந்துள்ளன. முடிவில் செவ்விலக்கிய விளையாட்டுகள் தமிழர் சமுதாயத்தின் மன உடல் ஒற்றுமை பொறியியல் என்பதை நிரூபிக்கிறது
Shanlax (Sun,) studied this question.