மனித உணர்வுகள் தனிப்பட்ட உளவியல் அனுபவங்களாக மட்டும் புரிந்துகொள்ளப்படுவதில்லை, நியூரோ வேதியியல், உயிரியல் மற்றும் அறிவாற்றல் செயல்முறைகளின் கூட்டு முயற்சியில் உருவாகும் ஒருங்கிணைந்த நிகழ்வுகளாகும். இலக்கியங்களில் மனித உணர்வுகள் அவரவர் புரிதலுக்கு ஏற்ப வெளிப்படுத்தப்படுகின்றன.தமிழிலக்கியத்தில் காணப்படும் மெய்ப்பாடு என்ற தொல்காப்பியரின் கோட்பாட்டினை, நரம்பியல் வேதியியல் பார்வையில் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. வேதநாயக சாஸ்திரியார் இயற்றிய ஞான நொண்டி நாடகத்தைத் தரவாக எடுத்துக்கொண்டு, தொல்காப்பியத்தில் வரையறுக்கப்பட்ட எண்வகை மெ#ப்பாடுகளை, டோபமைன், செரோடோனின், கார்டிசோல், நார்பினெஃப்ரின், ஆக்ஸிடோசின், போன்ற நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் மற்றும் ஹார்மோன்களின் செயல்பாடுகளால் எவ்வாறு உணர்வுகள் தோன்றுகின்றன என்று ஒப்பிட்டுப் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. அவை வேதநாயக சாஸ்திரியாரின் ஞான நொண்டி நாடகத்தில் வெளிப்பெறுமாற்றை எடுத்துரைத்து தமிழிலக்கியக் கோட்பாடுகள் உணர்வுகளை உடல் மையமான அனுபவங்களாகக் கருத்தாக்கி, நவீன உணர்ச்சி அறிவியலை முன்கூட்டியே எதிரொலித்துள்ளன என்பதை இவ்வாய்வு நிறுவுகிறது.
Shanlax (Sun,) studied this question.