ஓரெழுத்து ஒரு மொழி, ஈரெழுத்து ஒரு மொழி, இரண்டுக்கும் மேற்பட்ட தொடர் மொழி எனச் சொல் பாகுபாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கியக் கட்டமைப்பு எழுவாய்த் தொடர், பயனிலைத் தொடர், வேற்றுமைத் தொடர் எனத் தொடர்களை கொண்டு உருவாக்கப்படுகிறது. பயனிலைத் தொடரே ஒரு வாக்கியத்தின் தலைமைக் கூறாக உள்ளது. பயனிலைத் தொடரை அடிப்படையாகக் கொண்டே எழுவாய்த் தொடர், வேற்றுத் தொடர் ஆகியன இயங்குகின்றன. கலவை வாக்கியம், கூட்டு வாக்கியம் முதலான வாக்கியங்களில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் எனப் பல நிலைகளில் பல தொடர்களைக் கொண்டு கட்டமைக்கப்படுகிறது. கலவை வாக்கியம், கூட்டு வாக்கியம் சொல்வோரின் பொருள் சூழலுக்கு ஏற்பப் பல தொடர்களைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. அவ்வாறு உரைநடையில் உருவாகும் வாக்கிய அமைப்பினை அடிப்படையாகக் கொண்டு திவ்வியப் பிரபந்த மொழியில் தொடரியல் கோட்பாடானது உருவாக்கப்பட்டுள்ளது.
மு. துர்கா (Sun,) studied this question.