போதை தரும் கள்ஶீ மது வகைகள் ஆகியவற்றைக் குடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் தீமைகளைக் கருத்தில் கொண்டே சமணம் கள்ளுண்ணாமையை வெகுவாக வலியுறுத்துகிறது. “குடி குடியைக் கெடுக்கும்" என்னும் பழமொழி சமூகத்தில் பன்னெடுங்காலமாக நிறுவப் பெற்றுள்ள உண்மையை எடுத்துரைக்கின்றது. உணவு ஒரு மனிதனின் உடல் மற்றும் மன நலன்களின் சமநிலைக்கு ஒரு முக்கியகாரணமாகிறது. சமண உணவு பழக்கங்களின் பட்டியலிலும், தசதர்மத்திலும், கள்ளுண்ணாமை இடம் பெறுகின்றது. சமணம் கண்டிக்கும் 'வியசனங்கள்' என்றழைக்கப் பெறும் விலக்கப் பெற்ற போதைகளின் பட்டியலிலும் கள் உள்ளது
Shanlax (Sun,) studied this question.