தொல்காப்பியம் பொருளதிகார அகத்திணையில் அகத்திணைகளை ஏழாகக் கூறுகின்றது. கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை என்ற வரிசை முறையில் அகத்திணையினை வரிசைபடுத்துகின்றது. இவற்றில் குறிஞ்சி முதல் பாலை வரையிலான ஐந்திணையினை அன்பின் ஐந்திணை என்கிறது. கைக்கிளை என்பதை ஒருதலைக் காதல் என்றும் பெருந்திணையினைப் பொருந்தாக் காமம் என்றும் கூறுகிறது. கைக்கிளை என்பதில் கை என்பது ஒழுக்கம் என்ற பொருளைக் குறிக்கும். தலைவன் மற்றும் தலைவியிடத்தில் யாரேனும் ஒருவரிடத்தில் மட்டும் தோன்றும் அளவற்ற, ஈடு இணையற்ற காதல் என்ற பொருளில் இச்சொல் எடுத்தாளப்படுகிறது. தொல்காப்பியம், சங்கஇலக்கியம், சிலப்பதிகாரம் ஆகிய தமிழ் இலக்கிய, இலக்கணங்களில் பதிவாகியுள்ள கைக்கிளை தொடர்பான பதிவுகளை எடுத்துரைப்பதும், காலமாற்றம் மற்றும் வளர்ச்சியில் கைக்கிளையின் செல்நெறிகளில் அடைந்துள்ள மாற்றத்தை இனம்கண்டு உரைப்பதும் இக்கட்டுரையின் நோக்கமாகும்.
Shanlax (Sun,) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: