இயற்கையின் படைப்பில் சிறப்பு வா#ந்தது பெண் படைப்பாகும். பெண் இடம் பெறாத இலக்கியம்இல்லை. பெண்மையினைப் போற்றாத புலவர்களோ கவிஞர்களோ இல்லை எனலாம். பெண்ணியத்தோற்றச் சிந்தனைகளின் அடிப்படையில் கூறினால், பெண்ணியம் என்பது ஒரு சமூகச் சீர்திருத்த இயக்கம், பகுத்தறிவு இயக்கம் இவற்றை எல்லாம் உள்ளடக்கிய இலக்கிய இயக்கம் எனலாம். தமிழகத்தில் பெண்கள் சங்க காலத்தில் வாழ்ந்தவர்களைப் போன்று தன்னிகரின்றித் தலை நிமிர்ந்து தாயகம் போற்றி வாழ்ந்திட வேண்டும். “பெண்ணின் பெருந்தக்க யாவுளீ என்ற வள்ளுவரின் வரிகள் பெண்ணுக்குச் சிறப்பு சேர்கிறது. சங்க காலத்து பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை சரியாக அறிய எட்டுத்தொகை நூல்களில் இடம் பெறும் பெண்களின் நிலையை அறிந்து கொள்வது அவசியம். எனவே “எட்டுத்தொகை நூல்களின் பெண்ணியம்” என்ற கட்டுரைத் தலைப்பு எடுத்தாளப்பட்டுள்ளது.
Shanlax (Sun,) studied this question.