இலக்கியங்கள் காலத்தால் பிரதிபலிக்கப்பட்டு உணரப்பட வேண்டும். இவை, இன்றைய நிலைபேறுக்குஏற்றவாறு உதவமுடியும். இந்த நோக்கிலான வாசிப்பையே மு.ரா அவர்கள் முன்னெடுத்துள்ளார். சங்கஇலக்கிய ஆய்வுலகத்தில் இலக்கியங்கள் குறித்த ஆய்வுகள் முடிந்துவிட்டது என்று பேசுப்பொருளாக இருந்த அச்சூழலில் இப்போதுதான் சங்க இலக்கிய ஆய்வுகள் பெரும்பான்மையாக வெளிவந்துக் கொண்டே இருக்கின்றன. சங்க இலக்கியத்தில் ஆய்வுகள் தொடர்வதற்கு ஏராளமாக இருக்கின்றன என்று எண்ணுவதற்கு மு.ரா&வின் ஆளுமையின் மூலம் புலப்படுத்துக்கின்றது. இவர் இயற்றிய எந்தை நூலில் “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய முந்துநிலத்தின் பெருமையை அனைவரும் புகழ்ந்து போற்றும் அளவிற்கு வியந்துரைக்கின்றார் இந்நூலாசிரியர். “எந்தை” ஒரு பன்முகக் களத்தை நமக்கு கவனப்படுத்துகிறது. ஒவ்வொரு இயலும் அதன் பொருளுக்கேற்ப ஆழ அகலத்தை உணர வைக்கிறது. மு.ரா&வின் ஆளுமை - எந்தை பற்றி இக்கட்டுரை விளக்குகிறது.
Shanlax (Sun,) studied this question.