இலக்கியம் மனித வாழ்வின் அறிவுச்சுடரை ஏற்றுகின்ற அற்புத ஒளிவிளக்காகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்த தனிப்பெரும் புலவர்வள்ளுவர். இவர் வையகம் தழைத்து வாழ வேண்டும் என்ற நல் எண்ணத்தில் அறக்கருத்துக்கள் நிறைந்த திருக்குறளை எழுதினார். இது உலகப்பொதுமறையாகப் போற்றப்படுகிறது. எக்காலத்தும் எந்நாட்டவராலும் எச்சமயத்தாராலும் பின்பற்றக் கூடிய கருத்துக்கள் இதில் இடம் பெற்றுள்ளன. மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான அறிவுரைகளைத் தெளிவாக விளக்கியுள்ளார். அறம் பொருள் இன்பம் என்ற மூன்று பிரிவுகளில் வாழ்க்கை பொலிவடையும் வழிவகைகளை வகுத்துள்ளார். காலத்தால் பழமை வாய்ந்த திருக்குறள் குடும்ப சமுதாய உறவுகளைப் பற்றித் தெளிந்த வடிவில் பதிவு செய்துள்ளது. நல்லதை மட்டும் செய்ய வேண்டும் .தீயதை தவிர்க்க வேண்டும். மனிதநேய உணர்வுடன் நடத்தல் வேண்டும். என்னும் நல் வழிக்கருத்துக்களை வள்ளுவர் திருக்குறளில் உணர்த்தியுள்ளார்.
shanlax (Wed,) studied this question.