உலக இலக்கியங்களுள் சங்க இலக்கியமானது எந்தவொரு சமயத்தினையும் ஒத்திராத தலைசிறந்த இலக்கியம் ஆகும். சங்ககால மக்களின் வாழ்வினை புடமிட்டுக் காட்டும் வரலாற்றுப் பெட்டகமாகக் காலந்தோறும் திகழக் கூடிய ஒன்றாகும். சங்க இலக்கியமானது எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்னும் இரு பெரும் பிரிவினையும் அவற்றிற்குள் அகப்பொருள், புறப்பொருள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியுள்ளது. அகமானது காதல், களவு, கற்பு என்பதனையும் புறமானது கொடை, வீரம், போர் போன்றவற்றினைப் பாடு பொருளாகவும் கொண்டது. எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள் சார்ந்த நூல். பதிற்றுப்பத்தும் புறநானூறும் ஆகும். இவற்றில் புறநானூற்றில் உள்ள பாடல்களில் மன்னர்கள் மற்றும் வீரர்களின் போர் பற்றிய பதிவுகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
shanlax (Wed,) studied this question.