தமிழ் இலக்கியத்தின் அடிப்படை வடிவம் கவிதையாகும். இது காலத்திற்கு காலம் அரசியல், கலாச்சாரம், அறிவியல் என்பவற்றின் தாக்கத்தால் மாற்றமுற்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வளர்ச்சியடைந்துள்ளது. கற்பவர்உள்ளத்தை ஈர்க்கும் மந்திர சக்தியைப் பெற்றிருப்பது கவிதை இலக்கியத்தின் முக்கிய பண்பாகும். மனதில் பதிந்த காட்சியை சாதாரண மனிதன் கூறுவதை விட அதை ஒரு கவிஞன் கவிதையின் வழி வெளிப்படுத்தும் போது மற்றவர்களுக்கு கருத்தோடு காட்சியை உணரச் செய்ய முடியும். இது கவிதையிலக்கியத்தின் சிறப்பு. தமிழ் இலக்கிய உலகில் எண்ணற்றோர் கவிதை எழுதி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளனர். அவர்களுள் காலத்தால் அழியாத பல உயரிய படைப்புகளைத் தமிழன்னைக்கு அணிகலன்களாய் சூட்டி, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் மனங்களில் தம் பாடல்களால் தனக்கென ஓர் இடம் பிடித்திருப்பவர்பெரும் சிறப்பிற்குரிய கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள். பல்வேறு இலக்கிய களங்களில் சாதனை புரிந்த கவிஞர்வைரமுத்துவின் கவிதைகளில் காணப்படும் தன்னம்பிக்கைப் பற்றிய சிறப்புகளை எடுத்துரைப்பதாய் இக்கட்டுரை அமைகிறது.
shanlax (Wed,) studied this question.