PulseExploreJournal ClubDebatesTrendingResearchersJournals
Instagram
HomeExploreJournal ClubTrending
Synapse
⌘+K
Synapse
May 7, 20260 citationsOpen Access

ப.சஙகரம நவலம தமழரன பரமத உணரசசயம தனனமபககயம

View Full Paper
Sshanlax

Key Points

  • This analysis explores how Tamil pride, linked to ancient kings, influences social identity and progress.
  • Literary examination of ப.சங்கரனின் works.
  • Analysis of cultural and historical themes related to Tamil identity.
  • Assessment of pride's effects on societal development.
  • Tamil pride intertwined with historical narratives can hinder social progress.
  • Arguments presented for a new understanding of history to foster societal improvement.
  • The literature offers pathways for confidence-building among Tamils beyond traditional pride.

Abstract

பண்டைத் தமிழ் நாகரிகம் பற்றிய பெருமிதங்களை உடையவர்களாக தமிழர்கள் காணப்படுகின்றனர். சங்க காலத்திய மன்னர்களின் போர் வீரம், கொடை ஆகியன பற்றி இறுமாப்பு கொள்வதும் அதனைத் தம் அடையாளமாக வரித்துக் கொள்வதும் இயல்பாகக் காணப்படுகின்றன. பண்டைய காலத்தில் மக்கள் அடைந்திருந்த நாகரிகமும் வாழ்க்கை முறையும் இன்றும் வேண்டப்படுகின்றன. மன்னர்களின் போர் வெற்றிகள் பற்றியும் அதனால் அவர்கள் அடைந்த புகழினையும் குறித்த சங்கப் பாடல்கள் இன்றைய மக்களால் விரும்பி பயிலப்படுகின்றன. அடையாள அரசியல் தோற்றம் பெற்ற பின்னர் ஒவ்வொரு இனக்குழுவினரும் தம் இன அடையாளத்தை வரலாற்றில் தேடும் பொறுப்புடையவர்கள் ஆயினர். அந்த வகையில் புகழ் மிக்க மன்னர்களைத் தம் முன்னோர்களாகக் கூறும் வழக்கம் இன்றும் பெருகியிருக்கிறது. ஒவ்வொரு சாதியினரும் சோழ மன்னர்களின் வழிவந்தவர்களாகத் தம்மை அடையாளப்படுத்தும் நிலையினை இன்று காண முடிகிறது. இத்தகைய பெருமித எண்ணங்கள் தேவை என்ற போதிலும் அதுவே சமூக முன்னேற்றத்திற்கு அடிப்படையாகி விடுமா என்ற கேள்வியினை வரலாற்றை மறுவாசிப்புக்கு உட்படுத்தும் ஆய்வாளர்கள் கேட்கின்றனர். அத்தகைய ஒரு கேள்வியை தன் புதினத்தின் வாயிலாக ப.சிங்காரம் முன் வைக்கின்றார். தமிழர்கள் தன்னுணர்ச்சி மிக்கவர்கள் மற்றும் அவர்களது பெருமித உணர்ச்சிக்கு பண்டைய மன்னர்களின் போர், வீரம், காதல் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன என்ற அடிப்படையில் அவற்றைப் பற்றிய வேறு விதமான புரிதலை முன் வைக்கிறார். பெருமித அடையாளங்கள் சமூகத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாகி விடும். அதிலிருந்து விடுபட்டு புறநிலையில் வரலாற்றை அணுகவேண்டும் எனவும் அப்போதுதான் சமூகம் முன்னேற்றம் அடைய முடியும் எனவும் குறிப்பிடுகிறார்.அவருடைய புதினமான புயலிலே ஒரு தோணியில் அவருடைய கருத்துக்களும் பெருமித சிந்தனைகளை மறுத்து சமூகம் முன்னேறுவதற்கான வழிகளையும் குறிப்பிடுகிறார். அவ்வெண்ணங்கள்தமிழர்க்குத் தன்னம்பிக்கை அளிக்கும் வகையினவாக இருக்கின்றன என்பதை இக்கட்டுரைதெளிவுறுத்துகிறது.

Ask AI
Helpful
Bookmark
Share
View Full Paper

Cite This Study

shanlax (2024) studied this question.

synapsesocial.com/papers/69fc2c4b8b49bacb8b347e58https://doi.org/10.5281/zenodo.12804365
Ask AI
Helpful
Bookmark
Share
View Full Paper