தமிழர் வாழ்வியல் மரபுகளுள் கலை என்பது முதன்மைக்கூறாகும். கலையின் நுட்பமான அறிவுப்புலப்பாட்டினைத் தமிழரினம் பெற்றிருந்தது. கலைகள் மனதிற்கு மகிழ்ச்சி ஊட்டும் கலையாக மட்டுமில்லாமல் பண்பாட்டின் சிறப்பினைப் புலப்படுத்தும் திறவுகளாகவும் விளங்குகின்றன. அதில் தெருக்கூத்து என்பது பழங்காலந்தொட்டு மக்களின் வாழ்வியலில் இருந்து வருவதைக் காணலாம். மங்கல நிகழ்விற்கும் திருவிழாக்களின்போதும் பெரும்பாலும்நிகழ்த்தப்பட்ட இக்கலை வடிவம் பொதுவான அரங்கினை நிகழிடமாகக் கொண்டு நடத்தப்படுவதாக அமைந்திருக்கிறது. அந்தவகையில் இவ்அரங்கின் அமைப்பு முறைகளை ஆரா#வதாக இவ்வா#வுக் கட்டுரை அமைந்துள்ளது
Shanlax (Sun,) studied this question.