திருக்குறள் பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் முதல் நூலும், தலைசிறந்த நூலுமாகும். இந்நூலில் உள்ள கருத்துக்கள் நாடு, இனம், மொழி கடந்து உலக மக்கள் அனைவரும் பின்பற்றக்கூடியதாகவும், சிறந்த வாழ்வியல் நூலாகவும் விளங்குகிறது. மேல்நாட்டு அறிஞர்கள் வீரமாமுனிவர், ஜி.யு.போப், எஃப். டபிள்யூ. எல்லீஸ், லாசரல் போன்றோர் தத்தம் மொழிகளில் மொழி பெயர்த்து தங்கள் நாடுகளில் பரப்பியதிலிருந்தே இந்நூலின் பெருமையை உணரலாம். விவிலிய நூலுக்கு அடுத்தபடியாக திருக்குறள்தான் அதிகமான மொழிபெயர்ப்புகளை உடையது. இந்நூலில் மானுடம் மேம்பட சொல்லப் பட்ட சிந்தனைகள் சமத்துவம், ஒழுக்கம், கல்வி, பகுத்தறிவு, உண்மையறிதல் எனப் பலவாக உள்ளன. இவற்றைப் பின்பற்றி செயலாற்றுவது மானுடம் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பெருமையுடன் விளங்கும்.
Building similarity graph...
Analyzing shared references across papers
Loading...
shanlax (Wed,) studied this question.
www.synapsesocial.com/papers/69fa97ce04f884e66b531996 — DOI: https://doi.org/10.5281/zenodo.10042851
shanlax
Building similarity graph...
Analyzing shared references across papers
Loading...