இலக்கியங்களில் பல செய்திகள் எழுதப்பட்டிருக்கும் ஆனால் விழும்பு நிலையில் உள்ள தோடர் இனம் மக்கள் பற்றி எந்த இலக்கியங்களும் எழுத படவில்லை. தோடரின மக்கள் நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர். நீலகிரி பிரித்தால் நீல + கிரி. நீல என்பது அடர்ந்த மலைப்பகுதியில் நீல நிற குறிஞ்சி பூக்கள் பூத்துக் குலுங்குவதால் நீல என பெயர் பெற்றது. கிரி என்றால் மலை ஆகும். அதனால் நீலமலை என பெயர் பெற்றது. காலப்போக்கில் நீலகிரி என பெயர் வந்தது. தோடர்கள் வாழும் பொழுது நீலகிரி மாவட்டத்திற்கு ஒத்தக்தகல் மந்து என பெயர் பெற்றிருந்தது. இவ்வின மக்கள் அவர்களது வாழ்வியல் முறைகளை பற்றி காண்பதே எனது ஆய்வு சுருக்கமாகும்.
shanlax (2024) studied this question.