சங்க காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் பொற்காலமாக சுட்டப் பெறுகிறது. சங்க காலத்தில் தான் மிகச்சிறந்த அகம், புறம் பற்றிய சிந்தனைகளோடு கூடிய யாப்பாக்கம் தொழிற்பட்டன. இக்காலகட்டத்து மக்களும் மன்னர்களும் புலவர்களும் தமிழ் மீது பற்று கொண்டிருந்தனர். புலவர்கள் தமிழின் சிறப்பை நுகர்ந்து வெளிப்படுத்தும் விதங்களில் தத்தம் புலமைகளைக் காட்டினர். இக்காலகட்டத்திற்கு அடுத்த காலகட்டமாக இருண்ட காலம், சங்கம் மருவிய காலம், அறநெறி காலம், நீதிநெறிக்காலம் என பல பெயர்களில் அழைக்கப்பெறும் சங்கம் மருவிய காலம் என்றதொரு காலம் நிலவியது. இக்காலகட்டத்தில் அறம், நீதி போன்றவை முதன்மையான பாடுபொருளாயின. இவ்வாறான பாடுபொருள் இடம்பெறுவதற்குக் காரணம் அறம் மற்றும் நீதி பேணப்படாமல் நலிவுற்றுப் போனதேயாகும். தேவையின் அடிப்படையில் படைப்புகள் உருவாகும் என்ற நிலையில் அறக்கருத்துக்கள் வலியுறுத்தப்பெற்றன. இத்தகைய அறநூல்களில் கல்வி மீதான சிந்தனைகள் குறித்து இக்கட்டுரை விளக்குகிறது.
Building similarity graph...
Analyzing shared references across papers
Loading...
Shanlax Journals
Building similarity graph...
Analyzing shared references across papers
Loading...
Shanlax Journals (Thu,) studied this question.
www.synapsesocial.com/papers/69df2c1de4eeef8a2a6b113d — DOI: https://doi.org/10.5281/zenodo.18228669