ஒருவர் தமது கருத்தை மற்றவருக்குத் தெரிவிக்க பிறிதொருவரை அனுப்புவதே தூது ஆகும். இதனைப் புறத்தூது அகத்தூது என இரண்டாகக் கூறலாம். அரசர்கள் பகைவரிடத்துத் தூதனுப்புதலும் புலவர் அரசரிடத்து தூதனுப்பலும் புறத்தூது ஆகும். மகாபாரதத்தில் பாண்டவருக்காக கண்ணன் சென்ற தூதும் இராமாயணத்தில் இராமனுக்காக அங்கதன் சென்ற தூதும் புறத்தூது ஆகும். தூதனுப்பும் மரபு சங்க இலக்கியங்களிலும் பக்தி இலக்கியங்களிலும் காப்பிய இலக்கியங்களிலும் காணப்படுகிறது. தமிழ் இலக்கியங்களில் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான தூது அகத்தூது முறையைப் பின்பற்றியது ஆகும். தலைவன் அழகிலும் பண்புகளிலும் மயங்கிய தலைவி, அன்னம் முதலான அஃறிணைப் பொருள்களையோ, தோழி முதலான உயர்திணை மாந்தரையோ தலைவனிடம் தூதாக அனுப்பி அவனுடைய உடன்பாட்டிற்கு அறிகுறியாக அவனிடமிருந்து மாலையை வாங்கி வருமாறு வேண்டுவதாக தூது அமைவது மரபு. அந்தவகையில் தமிழ் சிற்றிலக்கியங்களில் ஒன்றான தூது நூல்களில் பலபட்டடைச் சொக்கநாதரின் கிள்ளைவிடு தூதினைப் பற்றி விரிவாக ஆய்வதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
Building similarity graph...
Analyzing shared references across papers
Loading...
Shanlax Journals
Building similarity graph...
Analyzing shared references across papers
Loading...
Shanlax Journals (Thu,) studied this question.
www.synapsesocial.com/papers/69df2c77e4eeef8a2a6b18dc — DOI: https://doi.org/10.5281/zenodo.18228653
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: