இந்த சமுதாயத்தில் சக மனிதர்களைப் போல வாழவும் நடமாடவும் திருநங்கைகளுக்கு முழு உரிமையும் சுதந்திரமும் உண்டு. ஆனால் நடைமுறையில் இது பெரும்பாலும் சமுதாயத்தில் ஏற்றப்படவில்லை. அதையும் மீறி இந்த சமுதாயத்தில் வாழ முற்படும் திருநங்கைகள் பல்வேறு இன்னல்களையும், நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டிய சூழலை இந்த சமுதாயம் ஏற்படுத்தி கொடுக்கிறது. ஆண் பெண் போலவும் திருநங்கையர்களுக்கு சுதந்திரமாகவும், தன்மானத்துடனும் இந்த சமுதாயத்தில் வாழ்ந்திடவும், வழிகளில் வழிகளில் இருந்து அவர்களை மீட்டு எடுக்கவுமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய தேவை அனைவருக்கும் உண்டு. திராவிட இயக்கம் திருநங்கைகளுக்கு பல்வேறு சாதனைகளை பெற்று கொடுத்துள்ளது. திராவிட இயக்க தொடர்பாக பகுத்தறிவு சிந்தனை, பெண்ணே சிந்தனை, சமுதாய சிந்தனை போன்ற பல்வேறு ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருநங்கைகள் அரசு சார்ந்த பணிகளும், சுய தொழிலும் செய்து தங்களுடைய வாழ்வாதாரங்களை அதிகரித்து வருகின்றனர். திராவிட இயக்கப் பார்வையில் திருநங்கைகள் குறித்தன ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்து வரும் காலங்களில் ஆய்வு மேற்கொண்டால் திருநங்கைகளுக்கும் சமுதாயத்தில் அங்கீகாரம் கிடைக்கப்பெறும்
Building similarity graph...
Analyzing shared references across papers
Loading...
Shanlax
Building similarity graph...
Analyzing shared references across papers
Loading...
Shanlax (Sun,) studied this question.
www.synapsesocial.com/papers/69e472fc010ef96374d8ee8a — DOI: https://doi.org/10.5281/zenodo.18358681
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: