மனம் என்பது சிந்தனைகளின் ஊற்று. ஒருவன் மனதினுள் ஏற்படும் ஒரு நற்சிந்தனை அவனை மட்டுமல்ல, அவனைச் சார்ந்த குடும்பம், சமூகம் என எல்லாவற்றையும் நல்வழிப்படுத்தும். நற்சிந்தனைகளுக்கு நடுவே சில தீயச் சிந்தனைகளும் ஏற்படக்கூடும். அத்தகைய தீயச் சிந்தனைகளின் வழி செல்லாமல் நல்வழியில் நடத்தல் மனிதர்களுக்கு ஓர்அரிய செயலாகும். அதற்கு ஒருவன் தன் மனதை அடக்கி, ஒழுக்கத்துடன் வாழ வேண்டும். மனிதர்கள் திசைமாறும் போது, அவர்களை நல்வழிப்படுத்துவது கலைகளும், பெரியோர்கூறும் நல்லஅறவுரைகளும் தான். இத்தகைய அறவுரைகளை பகிரும் பல அறநூல்கள் தமிழில் உண்டு. இங்ஙனம் அற இலக்கியங்களின் வழி மட்டுமல்ல, புனைவு இலக்கியங்களின் வழியும் அறவுரைகள் கூறும் படைப்பாளர்கள் உண்டு. அத்தகைய ஓர் எழுத்தாளர்பண்டிதை விசாலாட்சி அம்மையார் ஆவார். அவரின் முதல் நாவலான லலிதாங்கியில் காணப்படும் தன்னம்பிக்கைச் சிந்தனைகள் மனிதர்களை மேம்படுத்துகின்றன என்பதை எடுத்தியம்புவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
Building similarity graph...
Analyzing shared references across papers
Loading...
shanlax (Wed,) studied this question.
www.synapsesocial.com/papers/69fbe3aa164b5133a91a2e95 — DOI: https://doi.org/10.5281/zenodo.12804386
shanlax
Building similarity graph...
Analyzing shared references across papers
Loading...
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: